×

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி முருகன் கோயிலில் பிப்.20, 21ல் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திண்டுக்கல்: மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி முருகன் கோயிலில் பிப்.20, 21 ஆகிய தேதிகளில் ரோப்கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

முருகனை தரிசிக்க பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்ல வசதியாக படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை இரயில் மற்றும் ரோப் கார் ஆகிய வசதிகள் உள்ளன. ரோப்காரில் சென்றால் மூன்று நிமிடங்களில் மலைக்கோவிலை அடைய முடியும் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த ரோப்கார் சேவை மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதனால் அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படும். இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் பிப்.20, 21ல் ரோப்கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக பழனிக்கு வரும் பக்தர்கள் படி பாதை வழியாகவும், மின் இழுவை ரயில் மூலமாகவும் மலைக் கோயிலுக்குச் சென்று முருகனை தரிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி முருகன் கோயிலில் பிப்.20, 21ல் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Palani Murugan Temple ,Dindigul ,Palani ,Dandayuthapani ,Arupada ,Tamil ,Lord ,Murugan ,Dinakaran ,
× RELATED பழனி அருகே கோயிலில் அனுமதி மறுப்பதாக கிராம மக்கள் புகார்!!